நான் ஆணாக இருந்திருந்தால்…! சமூகவலைதளங்களில் கவனம் பெற்ற குஷ்புவின் புகைப்படம்

0
211

நான் ஆணாக இருந்திருந்தால்…!

சமூகவலைதளங்களில் கவனம் பெற்ற குஷ்புவின் புகைப்படம்

நடிகை குஷ்பு ஆணாக மாறினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையான புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிக்கெட் பிரபலங்கள், திரைபிரபலங்கள் என பலரும் பேஸ் ஆப் என்ற செயலி மூலம் பெண்ணாக தோற்றமளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வயதானால் தோற்றம் எப்படி இருக்கும் என்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது. இவ்வாறான புகைப்படங்களை நம்மில் பலரும் ரசித்து, சிரித்து விட்டு கடந்து செல்வதை வாடிக்கையாக்கி விட்டோம்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது புகைப்படத்தை வைத்து ஆணாக தோற்றமளிக்கும் போட்டோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நான் ஆணாக இருந்தாலும், உண்மையில் மோசமாக இல்லை” என்று கருத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிலர் அமீர்கானை போல் இருப்பதாகவும், நகைச்சுவையான கமெண்ட்களையும் பதிவிட்டுள்ளனர். இதனால் இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.