நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம்

0

நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம்

ரேட்டிங்

வி.டி.ரித்திஷ்குமார் தயாரிப்பில் நான் அவளை சந்தித்த போது படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எல்.ஜி.ரவிசந்தர்.

“1996 ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிய கதை. சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்பு தேடி போகும் போது வழியில் இளம்பெண் ( நாயகியை ) ஒருவரை சந்திக்கிறான். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்தவள் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஹீரோ அவரை காப்பாற்றி அவளின் ஊர்வரை கொண்டு போய் விட போகிறான். போன இடத்தில் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது. நாயகன், நாயகி என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.

இதில் சந்தோஷ்பிரதாப்( மூர்த்தி), ஒரு உதவி இயக்குனராக உணர்வு பூர்வமாக நடித்துள்ளார்.

சாந்தினி (குமாரி) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இன்னும் அழுத்தமான வேடங்கள் கிடைத்தால் செய்யக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை.

இன்னசன்ட் , ஜி.எம்.குமார் (சாந்தினி அப்பா), பருத்திவீரன் சுஜாதா (சாந்தினி அம்மா), கோவிந்த மூர்த்தி (உதவி இயக்குனர்), சாம்ஸ் (உதவி இயக்குனர்) , டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா அனைவருமே கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- ஆர்.எஸ்.செல்வா காலத்து சூழலை காட்டியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்டர் ஜெய்காந்த் செட் பிராப்பர்ட்டிஸ்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

இசை-ஹித்தேஷ் முருகவேல் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அனைத்து மொழி சினிமாவிலும் கதை திருட்டு என்பது அடிக்கடி நடக்கும் விவகாரம். வழக்கமாக கதையை திருடுவாங்க, இல்லையேல் சீனை திருடுவாங்க ஆனால் இப்படி
பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சியின் சீரியலுக்கு பயன்படுத்தியது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் – எல்..ஜி.ரவிசந்தர். தன் வாழ்க்கையில் நடந்த உண்மைக் சம்பவத்தை அப்படியே வில்லன் இல்லாத திரைக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர். உதவி இயக்குனர் முதல் இயக்குனர் ஆனது வரை, அதற்காக மனைவி செய்த உதவிகள், தாயிடம் காட்டும் பாசம், வறுமையில் கஷ்டப்படும் போது எடுக்கும் முடிவு, அதன் பின் தாயின் அன்பிற்கு காணிக்கையாக க்ளைமாக்சில்  கண் கலங்க வைத்துவிடுகிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர்.

மொத்தத்தில் சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும்  நான் அவளை சந்தித்த போது அனைவரையும் கவரும்.

நம்ம பார்வையில் ‘நான் அவளை சந்தித்த போது’ படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.