“நானே பின்னணி குரல் கொடுப்பேன்..!” ”ஐந்து ‘சிறந்த நடிகர்’ அவார்டு உள்ளிட்ட 10 விருதுகளை அள்ளிய அறிமுக நாயகர்!!”

0
88

“நானே பின்னணி குரல் கொடுப்பேன்..!”
”ஐந்து ‘சிறந்த நடிகர்’ அவார்டு உள்ளிட்ட 10 விருதுகளை அள்ளிய அறிமுக நாயகர்!!”

வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் புதுமுகம் ருத்ரா நாயகராக நடித்துள்ள ”சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ‘ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே, சில பல பெரிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே , அள்ளியிருக்கிறது. அதில், ‘கோவா இன்டர்நேஷனல் பிலிம் காம்படீஷன் ‘, ‘செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , ‘சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , இண்டியன் மீராக்கி அவார்டு 2021, ஆர்ஐஎஃப்எஃப் … உள்ளிட்ட 5 சிறந்த நடிகர் விருதுகள்., அறிமுக நாயகர் ருத்ராவிற்கு , கிடைத்திருக்கிறது… என்பது சிறப்பு !

தமிழ் படங்களை பார்த்து வளர்ந்த கேரளா-திருவனந்தபுரத்துக்காரர் நாயகர் ருத்ரா , என்றாலும் ., தமிழில் ‘நானே இப்படத்திற்கு பின்னணி குரல் கொடுப்பேன்…’ என பிடிவாதமாக இருந்ததின் விளைவே இந்த விருதுகள்! ‘தாய் மொழி அல்லாத பிற மொழியில் பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் சிறந்த நடிகர் எனும் விருதுகளை வாங்குவதென்பது எவ்வளவு கடினம் !’ என்பது எல்லோருக்கும் தெரியும் தானே .?!

‘நபீஹா மூவீஸ் புரொடக்ஷன்’ என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள இப்படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” என்று பெயர் வைத்து., கதாநாயகனாக ருத்ரா நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்ஷா மற்றும் சுபலக்ஷ்மி, ‘ராட்சசன்’ வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிஜு விஸ்வநாத், இசை – ராஜேஷ் அப்புகுட்டன் & ருத்ரா, பாடல்கள் – ‘கட்டளை’ ஜெயா , எடிட்டிங். – சுதாகர், கலை இயக்கம் – மகேஷ் ஸ்ரீதர், நடனம் – ராபர்ட், ரேகா, ஸ்டண்ட் – விஜய், வசனம் மற்றும் இணை இயக்கம் – L.கணபதி,
தயாரிப்பு – நுபாயஸ் ரகுமான் கதை, திரைக்கதை, இயக்கம் – மகேஷ் பத்மநாபன் உள்ளிட்டோரின் உனழப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ருத்ரா வின் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தை THREE FACE Creations வெளியீடு செய்கிறது.