நானும் ஒரு பத்திரிகையாளர் தான் : உதயநிதி ஸ்டாலின்
பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள்
மற்றும் பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடந்தது.
திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனோ தடுப்பு பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: எனது தாத்தா கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல நானும் ஒரு பத்திரிகையாளர்தான். ஆகையால், பத்திரிகையாளர்களுக்கு எந்த நேரமும் உதவிட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் நிறைவேற்றி தர முயற்சி செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பாரதி தமிழன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் த.மணிவண்ணன் அவர்களின் தர்மலிங்கம் அறவழி தொண்டு கல்வி அறக்கட்டளை,அப்துல் கனி அவர்களின் லோகா பவுண்டேஷன் யூத்திங் அமைப்பு சார்பில் ஊடகவியலாளர்களுக்கு அரிசி,மளிகை, மருத்துவ பொருட்களை நிவாரணமாக இன்று வழங்கினோம் pic.twitter.com/CC8JfrNLJe
— Udhay (@Udhaystalin) June 1, 2021