நவம்பர் மாதம் வெளியாகும் ஆக்‌ஷன்

0

நவம்பர் மாதம் வெளியாகும் ஆக்‌ஷன்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்‌ஷன். துருக்கியில் பெரும் பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். தயாரிப்பு டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன். இந்தப் படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.

அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி அதிகம் பேசப்பட்ட நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்று டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது.