நட்ராஜ்-பூனம் பஜ்வா நடிக்கும் புதிய படம் குருமூர்த்தி

0
332

நட்ராஜ்-பூனம் பஜ்வா நடிக்கும் புதிய படம் குருமூர்த்தி

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி .இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு ச்சோதனை ஏற்படுகிறது குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது இதைஎப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் விதமாக-இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் காமெடி , சென்டிமென்ட் , ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக தயாரித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கான அனைத்துக் கட்ட படபிடிப்புகளும். நீலகிரி ‘மாவட்டம் பாண்டிச்சேரி, கேரளாவை ச்சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளிலும்நடந்து முடிவடைந்திருக்கிறது. ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் பட பிடிப்பு ஒரேஷெட் யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு முடிவடைந்திருக்கிறது வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாட்டோடு இந்தப்படத்திறகான இறுதி க்கட்ட (போஸ்ட் புரொடக்ஷன் ) வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது.

தில்: நடராஜ்(எ) நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை : ஒளிப்பதிவு டைரக்டர் தேவராஜ் கவனித்திருக்கிறார். இசையை சத்ய தேவ் உதய சங்கர், அமைத்திருக்கிறார் . பாடல்கள்:மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன், எடிட்டிங் : S.N. பாசில், கலை : தாகூர், நடனம்: ராதிகா, சண்டை: :.பயர் கார்த்திக், ஸ்டில்ஸ்: மதன், மக்கள் தொடர்பு:பெருதுளசி பழனிவேல், வசனம்: கீர்த்தி வாசன.

தயாரிப்பு:.சிவசலபதி , சாய் சரவணன்.

கதை, திரைக்கதை, டைரக் ஷன் கே.பி.தனசேகர்.