நட்புனா என்னானு தெரியுமா திரை விமர்சனம் ரேட்டிங் 3/5

0

நட்புனா என்னானு தெரியுமா  திரை விமர்சனம் ரேட்டிங் 3/5

சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக இருக்கும் கவின், ராஜீ, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் முதலில் வேலைக்கு செல்லாமல் பொழுதை போக்கினாலும் பின்னர் இளவரசுவைப் பார்த்து கல்யாண நிகழ்;ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்யும் தொழிலை தொடங்குகிறார்கள். பத்தாம் வகுப்பில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் பெண்கள் சவகாசமே வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் ராஜீ ரம்யா நப்பீசனை பார்த்தவுடன் ஒரு தலையாக காதலிக்க தொடங்கி அவரை பின் தொடர்ந்து செல்கிறார். ராஜீவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படும் நண்பர்களுக்கு அதன் பின் காரணம் புரிகிறது. ராஜு நண்பர்களுக்கு காதலியை காட்ட ரம்யா நப்பீசனைப் பார்த்ததும் கவினுக்கும், அருண்ராஜா காமராஜுக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த மூவரில் கவினை தேர்ந்தெடுத்து காதலிக்க தொடங்குகிறார் ரம்யா நப்பீசன். இதனால் கோபமடையும் மற்ற இருவரும் கவினை விட்டு ஒதுங்குகிறார்கள். இறுதியில் நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? கவின்-ரம்யா நப்பீசன் காதல் கை கூடியதா? ரம்யா நப்பீசன் ஏன் கவினை தேர்ந்தெடுத்தார்? என்பதே மீதிக்கதை.
சிவாவாக கவின் புதுமுகமாக அறிமுகமானாலும் தேர்ந்த நடிப்பில் மனதில் நிற்கிறார். ராஜீ முதலில் ஏனோ தானோ என்று வந்தாலும் காட்சிகள் நகர நகர அவரின் நடிப்பு மெருகேறி படத்திற்கு பலமாக இருக்கிறார்.மணியாக அருண்ராஜா காமராஜ் காமெடியாகவும், நண்பராகவும் வந்து உதவி செய்யும் குணத்தால் உயர்ந்து நிற்கிறார்.
இதில் ஸ்ருதியாக ரம்யாநப்பீசன் புதுமுகங்களுக் ;கிடையே தெரிந்த அழகான முகமாக, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
மற்றும் இளவரசு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர்அலிகான், அழகம்பெருமாள், ரமா, பபிதா, மதுரை சுஜாதா ஆகியோரின் அழுத்தமான, நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
யுவராஜின் ஒளிப்பதிவும், தரணின் இசையும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது.
இயக்கம்-சிவா அர்விந்த். காதலால் நட்பு விரிசலாகும் திரைக்கதையில் காமெடி, குடும்ப சென்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா அர்விந்த். ஏற்கனவே வந்த படங்களில் கலவையாக இருந்தாலும் அதையும் தன் இயக்கத்தால் சுவாரஸ்யமாக கொடுக்கும் நுணக்கம் தெரிந்தால் படம் வெற்றிதான் என்பதற்கு இந்த படமே சிறந்த சாட்சி.
மொத்தத்தில் இந்த கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் ஜில்லென காமெடியால் வருடும் குளிர் தென்றல் இந்த நட்புனா என்னானு தெரியுமா.

நம்ம பார்வையில் ‘நட்புனா என்னானு தெரியுமா” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.