நடுவன் விமர்சனம்

0
46

நடுவன் விமர்சனம்

கொடைக்கானலில் நண்பர்கள் பரத், கோகுல்ஆனந்த் இணைந்து தேயிலை தொழிற்சாலையை நடத்துகின்றனர். கோகுல் ஆனந்த் எந்த வேலையும் செய்யாமல் பணத்திமிரில் குடித்து விட்டு தூங்குவது மட்டுமே செய்கிறார். மற்ற ;அனைத்து வேலைகளையும் பரத் செய்ய இதனால் பரத் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னை நாளடைவில் பரத்தின் மனைவி அபர்ணா வினோத் நண்பர் கோகுல் ஆனந்துடன் கள்ளதொடர்பில் முடிகிறது. பரத்திற்கு தெரியாமல் இருவரும் பார்த்துக் கொள்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பரத்தின் உறவினர் வீட்டில் தங்க நேரிட உண்மையை அறிகிறார் பரத். அதன் பின் நடந்தது என்ன? உறவினர் வீட்டை விட்டு வெளியேறினாரா? என்பதே கதை.

தில் பரத் நிவாஸ், அபர்ணா வினோத் தவிர கோகுல் ஆனந்த், யோக் ஜேய்பி, ஜார்ஜ், பாலா, தசரதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜு மற்றும் ஆரத்யா ஸ்ரீ கொடுத்த கதாபாத்திரதிற்கு சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

தரண் குமாரின் இசையில் காலை அதிகாலை பாடல் காதுகளுக்கு இன்னிசை விருந்து.

யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் இயற்கையான காட்சிகள் கண்களுக்கு குளுமை, அருமை.

சன்னி சவ்ரவ் படத்தொகுப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், சசி குமார் கலை இயக்கம் படத்திற்கு பலம்.

க்ரைம் த்ரில்லர் கதையில் கூடா நட்பு கேடு தரும் என்பதை சொல்லி அதை ஆறு தொகுப்புகளாக கொடுத்து படத்தில் என்ன நடக்க போகிறது என்பதை சொல்லாமல் சொல்லி விடுவதால் விறுவிறுப்பை குறைத்து விடுகிறார் இயக்குனர் ஷரங். அதன் பின் கதையில் ஒட்டாமல் வரும் தொழிலாளர்களின் சண்டை, ஜாலி ட்ரிப்பில் கொலை, இன்ஸ்பெக்டரின் மிரட்டல், அதிலிருந்து தப்பிக்க கொள்ளை என்று படம் தடம் மாறி பரத் வீட்டிலேயே முடிகிறது. இறுதிக் காட்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் ஷரங்.

மொத்தத்தில்  க்யூ  எண்டர்ட்யின்மெண்ட் சார்பில் லக்கி ஜாஜர்  நடுவன் படத்தை தயாரித்து சோனி லைவ் வெளியீட்டில் ஒடிடி தளத்தில் வந்துள்ள நடுவன் படம் சஸ்பென்ஸ் இல்லாத க்ரைம் திரில்லர்.