நடிகை மைனா நந்தினிக்கு அழகான குழந்தை பிறந்தது!

0
338

நடிகை மைனா நந்தினிக்கு அழகான குழந்தை பிறந்தது!

சீரியல், நிகழ்ச்சிகள் என மைனா நந்தினி பங்கேற்றாலே அது மிகவும் காமெடியான பொழுதுபோக்காக இருக்கும் என்கிற பெயர்தான் மக்கள் மத்தியில் உண்டு. அவருடைய கணவர் யோகேஸ்வரனும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த ஜோடி சமூகவலைதளங்களிலும் மிகவும் பிரபலம். இவர்களுக்கு சமீபத்தில்தான் வளைகாப்பு முடிந்தது. முடிந்த கையோடு அவர்கள் எடுத்துக்கொண்டு கர்பகாலப் புகைப்படங்களும் டிரெண்டானது.

அதைத் தொடர்ந்து தற்போது நல்ல செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதாவது அவருக்கு குழந்தைப் பிறந்துள்ளது. அதுவும் ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

இதை மைனா நந்தினி மற்றும் அவருடையக் கணவர் யோகேஷ்வரனும் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ தகவலாகப் பகிர்ந்துள்ளனர்.

மைனா நந்தினி எனக்கு மற்றொரு குட்டி யோகி பிறந்துள்ளார் என்று கூறியுள்ளார். அந்த செய்திக்கு உடனே அவருடைய ரசிகர்கள் குட்டி யோகியின் புகைப்படத்தை பகிருங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். விரைவில் பகிர்கிறேன் என அவரும் பதில் கொடுத்துள்ளார்.