நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

0
2

நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

மும்பை, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி டுவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பின்பாக நடந்த வன்முறை தொடர்பாக கங்கனா ரணாவத்தின் பதிவுகள் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால், கணக்கு முடக்கப்பட்டதாக தெரிகிறது.

வெறுக்கத்தக்க பதிவுகளை மீண்டும் மீண்டும் கங்கனா ராணாவத் வெளியிட்டதாகவும் டுவிட்டரின் விதிமுறைகளை மீறும் வகையில் கங்கனா ரணாவத்தின் பதிவுகள் இருந்ததால் கணக்கு முடக்கப்பட்டதாகவும் டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.