நடிகர் விஜய்சேதுபதியின் க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

0

நடிகர் விஜய்சேதுபதியின் க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் க/ பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தண்ணீருக்காக போராடும் ஒரு கிராமத்து பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ், அரசியல் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அவரது கணவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு அரசு அதிகாரியாக தோன்றுகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தை பின்னணி இசைக்காகப் பார்த்த இசைமைப்பாளர் ஜிப்ரான் படக்குழுவினரைப் பாராட்டியிருந்தார். அதில் ‘அறம்’ படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்றும் இந்தப் படத்தை பலரும் எதிர்நோக்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.