நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

0
22

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சி‌கி‌ச்சைக்கு தயாராகி வருகிறார்.

நடிகர் விவேக் உயிரிழந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்தது என்பது குறிப்பிடதக்கது.