நடிகர் திலகம் நினைவு தினம் முதல் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம்! ராம்குமார் அறிவிப்பு!!

0
12

நடிகர் திலகம் நினைவு தினம் முதல் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம்! ராம்குமார் அறிவிப்பு!!

ஜூலை 21ம் தேதி நடிகர் திலகம் சிவாஜி நினைவு தினம் ஆகும். இந்த ஆண்டு முதல் அவரது நினைவு நாளில் 108 பெண்களுக்கு தாலிக்கு தலா அரை சவரன் தங்கம் வழங்கப்படும் என்று ராம்குமார் அறிவித்திருக்கிறார். சமீபத்தில் ராம்குமார் தமிழக பா.ஜ கட்சியில் உறுப்பினராக இணைந்தார். அவருடன் அவரது மகன் துஸ்யந்த் மற்றும் ரசிகர்களும் அக்கட்சியில் இணைந்தனர்.

சிவாஜி நினைவு தினத்தில் 108 பெண்களுக்கு தலா அரை சவரன் தங்க வருடாவருடம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து, நடிகர் திலகம் ஆசியுடனும்
இறையருளுடனும் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக
மேற்கொண்ட தேர்தல் பரப்புரைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்று
முடிந்தது. பயணத்திலும் பரப்புரைகளிலும் உடனிருந்து உதவிய நடிகர்
திலகத்தின் இதயங்கள் நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும்
இத்தருணத்தில் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரொனா தொற்று, மீண்டும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பரவத்
துவங்கியுள்ளது. மக்கள், அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக
இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டமாக கூடாதிருத்தல் உள்ளிட்ட
அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.

இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21ம் நாள் நடிகர் திலகம் நினைவு
நாளையொட்டி, இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு
தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில்
துவக்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் யாவும்
விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும்
ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.