நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்.எஸ் மோகன் உயிரிழப்பு

0
44

நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்.எஸ் மோகன் உயிரிழப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க போன்ற படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். அருண் விஜய்யின் மாமனாரான இவர், சமீப காலமாக மூச்சுத் திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் இயக்குனர் தாமிரா, தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் என அடுத்தடுத்து இருவர் மறைந்தது, தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.