தொட்டு விடும் தூரம் சினிமா விமர்சனம்

0

‘தொட்டு விடும் தூரம்’ சினிமா விமர்சனம்

ரேட்டிங்

உஷா கிரியேன்ஸ் சார்பாக P.ராமநாதன் ரக்ஷந்தி கிரியேஷன்ஸ் சார்பில் சு.சுரேஷ்; இணைந்து தயாரித்துள்ள படம் ‘தொட்டு விடும் தூரம்”.

சென்னையிலுள்ள ஒரு கல்லூரியிலிருந்து மாணவர்கள் N.S.S. கேம்பிற்காக தௌளாந்தி என்ற கிராமத்திற்கு செல்கிறார்கள். இந்த கிராமத்தில் சமூக சேவை செய்து கொண்டிருக்கும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை பிரியா என்ற மாணவி சந்திக்க நேரிடுகிறது . அவனுடைய நல்ல குணங்கள் பிரியாவிற்கு பிடித்து போக அவன்மீது காதல் வசப்படுகிறாள். அழகும் பிரியாவின் காதலை ஏற்றுக் கொள்கிறான். இந்நிலையில் வேலை விஷயமாக அழகு வெளியூர் சென்று வருவதாக சொல்லிவிட்டு செல்கிறான், அவன் திரும்ப வருமுன் N.S.S. கேம்ப் முடிந்து அழகை சந்திக்க முடியாமல் பிரியா சென்னை சென்று விடுகிறார். இந்த சூழ்நிலையில் அழகு, பிரியாவின் முகவரியை வைத்துக் கொண்டு கிராமத்தில் இருந்து காதலியை தேடி சென்னை செல்கிறான். வழியில் பிரியாவுக்கு திருமணம் என்ற வரவேற்பு பலகையை பார்த்து அதிர்ச்சியடைகிறான். ஒருகட்டத்தில் அழகு கொண்டு வந்த பேக்கையும், செல்போனையும் களவாடப்படுகிறது. தன் நண்பனின் உதவியுடன் சென்னையில் வேலைக்கு சேர்கிறான். உண்மையில் பிரியாவுக்கு திருமணம் நடந்ததா? அழகும் பிரியாவும் சந்தித்தார்களா? அவர்கள் காதல் நிறைவேறியதா? என்பதே மீதி கதை.

நீ என்ன மாயம் செய்தாய், பேரழகி 50 போன்ற படங்களின் கதாநாயகன் விவேக்(எ)விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா, லிவிங்க்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோர் கிடைத்த கதாபாத்திரத்தை வெச்வென செய்துள்ளனர்.

கே.ராம்பாரதி பாடல்வரிகளுக்கு நோவா இசை மூலம் மெருகேற்றியுள்ளார்.

பட ஓட்டத்திற்கு நடன இயக்குனர் ராதிகா, சண்டைக்காட்சிகள் அமைத்த இளங்கோ, கே.ராம்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் வீரசெந்தில் ராஜ் படத்தொகுப்பு பக்கபலமாக அமைந்துள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.P.நாகேஸ்வரன். கிராமத்தில் இருந்து காதலியை தேடி வரும் காதலனின் ஒரு காதல் பயணம் சார்ந்த வழக்கமான கதையம்சத்தை தான் இவரும் திரையில் சொல்லியிருக்கிறார். இவர் க்ளைமாக்ஸில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘தொட்டு விடும் தூரம்’ ஓரு முறை பார்க்கலாம்.

நம்ம பார்வையில் ‘தொட்டு விடும் தூரம்’ படத்துக்கு 2 ஸ்டார் தரலாம்.