தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு: நூற்றுக் கணக்கான தேனீக்களை உடலில் மொய்க்க விட்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி!

0
1

தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு: நூற்றுக் கணக்கான தேனீக்களை உடலில் மொய்க்க விட்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி!

தேனீக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தனது உடலில் தேனீக்களை மொய்க்க விட்டு புது வித ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.

பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் வழக்கமாக, பல்வேறு உடைகள் மற்றும் தீம்களில் போட்டோஷூட் செய்து அதன் முடிவுகளை தங்கள் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இருப்பினும், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகை ஏஞ்சலினா ஜோலி, 18 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான தேனீக்களை தனது உடலில் விட்டு ஒரு புதுமையான போட்டோஷூட்டை செய்திருக்கிறார். பூமியின் செயல்பாட்டில் மிக முக்கியமான உயிரினங்களில் தேனீக்களும் ஒன்று என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கையாளப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற கேப்ரியலா ஹியர்ஸ்ட் ஆடையை அணிந்து கொண்டிருக்கும் ஏஞ்சலினா நேராக கேமராவை நோக்கியபடி போஸ் கொடுக்கிறார். பூக்களை மொய்ப்பதை போல, ஏஞ்சலினாவின் தோள்பட்டை, மார்பு மற்றும் முகத்தில் தேனீக்கள் மொய்க்கின்றன.

“18 நிமிடங்கள் வரை ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்கள் மொய்க்க போட்டோ ஷூட் நடத்த வேண்டியிருந்தது. இந்த பெருந்தொற்று நேரத்தில் இது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. இருந்தாலும் பாதுகாப்புடன் செய்து முடித்துள்ளோம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிச்சர்ட் அவெடன் எடுத்த ‘பீ கீப்பர் போர்ட்ரைட்’ படத்தை முன்மாதிரியாக வைத்து அதே முறையை பின்பற்றி இந்த படத்தை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார் இதன் புகைப்படக்கலைஞர் டான் விண்டர்ஸ்.

இந்த படப்பிடிப்பின் போது ஏஞ்சலினா தவிர மற்ற அனைவரும், பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/danwintersphoto/?utm_source=ig_embed&ig_rid=0ef22376-77b5-4f5e-b3af-105f08ab5b2c