தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கர்ணன்’… தனுஷ் ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

0
24

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கர்ணன்’… தனுஷ் ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

‘கலைப்புலி’ S.தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம், ‘கர்ணன்’. கடந்த 9-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தனுஷ் மட்டுமல்லாது இதில் நடித்த அனைவரின் நடிப்பும் பேசப்பட்டது. இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் என தொழில்நுட்பம் ரீதியாகவும் படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குநர் மாரி செல்வராஜின் கதை சொல்லல் படத்தை தூக்கி நிறுத்தியது.

Bellamkonda – பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ்

இந்நிலையில், கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். ‘கர்ணன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை அதன் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ S.தாணுவிடம் இருந்து வாங்கி இருக்கிறார், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். மேலும் இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், தான் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். அதில் ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ போன்ற தமிழ் படங்களின் ரீமேக்கும் அடங்கும்.

‘கலைப்புலி’ S.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படமும் தற்போது தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சுரேஷ் புரோடக்‌ஷன்ஸோடு இணைந்து தயாரித்திருக்கிறார் ‘கலைப்புலி’ S.தாணு. இப்படத்தில் வெங்கடேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். மே 14 வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக படம் தள்ளிப்போகிறது.