தூநேரி சினிமா விமர்சனம்: தூநேரி  குழந்தைகளை ஈர்க்கும் ஹாரர் திரில்லர்

0
99

தூநேரி சினிமா விமர்சனம்: தூநேரி  குழந்தைகளை ஈர்க்கும் ஹாரர் திரில்லர்

ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் சார்பில் சுனில் டிக்ஸன் தயாரித்து இயக்கி, நிவின் கார்த்திக், ஜான் விஜய், மியாஸ்ரீ நடிப்பில் கலையரசன் இசையில் கலேஷ் குமார் ஒளிப்பதிவில் மற்றும் ஆலன் ஒலி வடிவமைப்பில் உருவாகி இருக்கும் படம் தூநேரி. மக்கள் தொடர்பு – பி.ஜான்.

சென்னையில் பணி புரியும் போலீஸ் அதிகாரி ஒருவருடைய மகளின் பள்ளித் தோழியை அவளது சித்தியினால் (அப்பாவின் இரண்டாம் மனைவி) கொடுமைப் படுத்தப்படுகிறாள். இதை அறிந்த போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவிடம் சொல்ல, அந்த சிற்றன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து கலாட்டா செய்து விட்டுப் போகிறாள். ஊட்டி அருகில் இருக்கும் தூநேரி  என்ற கிராமத்தில் காவல்காரனாக இருந்து பின்னர் மக்களால் திருடன் என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, ஒரு நிலையில் கொல்லப்பட்ட கருப்பசாமி என்பவன் கெட்ட ஆன்மாவாக உலவி வருவதாக ஊர் நம்புகிறது. பிறகு பகலில் அழகாக காட்சியளிக்கும் இந்த கிராமத்தில் இரவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் சில மரணங்கள் நிகழ்கின்றன. இந்த நிலையில் போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாற்றல் ஆகி தூநேரிக்கு வரும் அவர்கள் கல்லறை பக்கத்தில் உள்ள வீட்டில் தங்குகிறார்கள்;. மர்மமான முறையில் நிகழும் மரணங்களை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி விசாரணை தொடங்கி அதை நெருங்கி செல்லும்போது அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை காண்கிறார். ஊர் மக்களால் வளர்க்கப்படும் – கருப்பசாமியின் மகன் போலீஸ் அதிகாரியின் பிள்ளைகளுக்கு நண்பன் ஆகிறான். மக்கள் அனைவரும் பேய் பயத்தில் இருக்கும் வேலையில் அந்த போலீஸ் அதிகாரியின் மனைவியையும் பேய் பிடிக்கிறது. இந்த மரணங்களுக்கான பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? அதை போலீஸ் அதிகாரி கண்டுபிடித்தாரா? யார் அந்த பேய், என்ன என்பதே மீதிகதை.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க போலீஸ் அதிகாரியாக நிவின் கார்த்திக் மற்றும் மியாஸ்ரீ கதைக்கு நல்ல பொருத்தம். பேயாக நடித்திருக்கும் வில்லி மிரட்டுகிறார்.

சிறுவர் நட்சத்திரங்கள் அஸ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா ஆகியோர் ஹாரர் த்ரில்லர் கதை ஓட்டத்தில் அற்புதமாக ஸ்கோர் செய்துள்ளார்கள்.

நடிகர் ஜான் விஜய் வலு மிகுந்த கருப்பசாமி கதாபாத்திரத்தை தனது தோளில் சுமந்து, குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு தனது மிரட்டளான நடிப்பை வெளிபடுத்தியும் அதே சமயத்தில் இறுதியில் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார்.

கலையரசனின் இசையும் காட்சிகளை மேம்படுத்தி திக் திக் என பெப் சேர்க்கிறது.
அழகிய காடுகள், மலை நிலப்பரப்பின் அழகிய அழகை மிகவும் பாராட்டத்தக்க வகையில் படம்பிடித்திருக்கும் கைலேஷ் குமார் மற்றும் ஆலனின் ஒளிப்பதிவு.

குழந்தைகளை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் பாணியில் படம் துவங்கிய ஒரு சில நிமிடங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் சுனில் டிக்ஸன்.

மொத்தத்தில் தூநேரி  குழந்தைகளை ஈர்க்கும் ஹாரர் திரில்லர்.