தீபாவளி ரேசில் ரஜினிகாந்தின் அண்ணாத்த உடன் மோதும் 4 படங்கள்

0
128

தீபாவளி ரேசில் ரஜினிகாந்தின் அண்ணாத்த உடன் மோதும் 4 படங்கள்

கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை 100 சதவீதமாக உயர்த்த திரைப்பட சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1-ந் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறினார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விருந்தாக ரஜினிகாந்தின் அண்ணாத்த, ஆர்யாவின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 3 படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் ஜெய்பீம் ஓ.டி.டி, தளத்திலும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.