திரையில் நடிப்பவர்களல்ல ஹீரோக்கள் – தரையில் நிமிர்ந்து நடப்பவர்களே ஹீரோக்கள்

0
18

திரையில் நடிப்பவர்களல்ல ஹீரோக்கள், தரையில் நிமிர்ந்து நடப்பவர்களே ஹீரோக்கள்

மீரான்முகமது முகநூல் பதிவு

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. திருப்பூரில் உள்ள ஒரு மிகப்பெரிய வேட்டி நிறுவனம் அண்ணன் ராஜ்கிரணை தனது விளம்பர படத்தில் நடிக்க கேட்டது. “எங்க வேட்டியை கட்டிக்கிட்டு நீங்க ஒரு 10 மீட்டர் நடந்தா போதும், மற்றதையெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். சம்பளம் ஒரு கோடி” என்றது அந்த நிறுவனம்.
திரும்பிய பக்கம் எல்லாம் கடன் இருந்தபோதும் அண்ணன் ராஜ்கிரண் அந்த கம்பெனி பக்கம் திரும்பி பார்க்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “எனக்கு தர்ற சம்பளத்தை மீட்க என் சகோதரன் வாங்குற வேட்டியிலதானே விலை வைப்பீங்க, வேட்டி கட்டத் தெரிஞ்சவனுக்கு நல்ல வேட்டி பார்த்து வாங்கவும் தெரியும்”னு சொல்லிட்டாரு.
சில்க் ஸ்மிதாவை ஒரு சோப்பு நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிக்க அழைத்தது. அதற்கு அவர் “உங்க சோப்பை கொடுங்கள், நான் ஒரு மாதம் வரை உபயோகித்து பார்த்துவிட்டு அப்புறம் நடிக்கிறேன்” என்றார். கம்பெனி அவருக்கு இருக்கிறதுலேயே நல்ல சோப்பாக கொடுத்தது, ஒரு வாரத்திலேயே சோப்பை அந்த கம்பெனி முகத்தில் விட்டெறிந்து விட்டு “வேற ஆளப் பாருங்க”ன்னு சொல்லிவிட்டார்.
மலையாள நடிகை பார்வதியிடம் ஒரு சிவப்பழகு கிரீமில் நடிக்க கேட்டார்கள். “கருப்பு அழகில்லைன்னு சொல்ற உங்க பாலிசியில தீய வைக்க… நடிக்க மாட்டேன் போடா”ன்னு சொல்லிட்டாரு.
இதுதான் நிஜ ஹீரோக்களின் கதை. ஆனால் சில ஹீரோக்கள் படத்தில் ஊருக்கு உபதேசம் செய்து விட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டு, வான்கோழி வளர்ப்பு, கொள்ளை அடிக்கிற ரியல் எஸ்டேட் கம்பெனிகள், ஆஸ்பத்திரிகளுக்கு கியாரண்டி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு நடிகர் நகை வாங்கச் சொல்வார், இன்னொரு நடிகர் அதை அடகு வைக்கச் சொல்வார்.
படத்துக்கு படம் இயற்கை விவசாயத்துக்கு போராடும் விஜய் விவசாய தண்ணீரை உறிஞ்சும், பெப்சி, கோலா விளம்பரத்தில் நடிப்பார். மக்கள் தந்த பாப்புலாரிட்டியை அந்த மக்களிடமே விற்கும் மலிவான வியாபாரம் இது.
இப்போது விஷயத்துக்கு வருவோம்…
தற்போது யூரோ கோப்பைக்கான லீக் கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியை ஸ்பான்சர் செய்து வருகிறது கோகோ கோலா நிறுவனம். இந்த போட்டி தொடர்பான எல்லா விஷயத்திலும கோகோ கோலோ பாட்டிலை நுழைத்துக் கொண்டிருந்தது அந்த நிறுவனம்.
இந்த போட்டி தொடர்பாக போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவரோடு சேர்த்து டிவியில் தெரிய வேண்டும் என்பதற்காக இரண்டு கோகோ கோலா பாட்டில்களை கொண்டு வைத்தார்கள். வந்தவர் முதல் வேலையாக அந்த பாட்டில்களை வேகமாக எடுத்து ஓரமாக வைத்து விட்டு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து “வாட்டர் குடிங்க” என்றார். அதன் பிறகு கோகோ கோலா என்று நக்கலாக மைக்கில் பேசினார். அவரது முகத்தில் வெடித்த கோபத்தையும், வெறுப்பையும் உற்றுப் பார்த்தால் தெரியும்.
உடனே நம் தமிழ்நாட்டு மூளை சிந்திக்கும். அவருக்கும் அந்த கம்பெனிக்கும் ஏதாவது கொடுக்கல், வாங்கல் பஞ்சாயத்து இருக்கும் என்று. ரொனால்டோ தூய தண்ணீருக்கு ஆதரவாகவும், குளிர்பாணங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இத்தனைக்கும் உலகம் முழுக்க கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டவர் அவர்.
ரொனால்ட்டின் இந்த 5 விநாடி வீடியோவால் கோகோ கோலாவின் ஷேர் மார்க்கெட் சரிந்து கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது அந்த நிறுவனம்.
திரையில் நடிப்பவர்களல்ல ஹீரோக்கள், தரையில் நிமிர்ந்து நடப்பவர்களே ஹீரோக்கள்.
நன்றி: மீரான்முகமது