திரைத்துறையில் 27 வருடங்களை நிறைவு செய்த சூர்யா… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய ‘கங்குவா’ படக்குழு!
நடிகர் சூர்யா, சிவகுமாரின் மகனாக திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் தனது கடின உழைப்பினாலும் திறமையினாலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.திரைத்துறையில் 27 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா…. புதிய போஸ்டர்கள் வெளியீடு!கடந்த 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி 2001இல் வெளியான நந்தா படத்தின் மூலம் தனக்கான முத்திரையை பதித்தவர் சூர்யா. நந்தா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம் என ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு பரிமாணத்தில் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிக் கொண்டார். அந்த வகையில் ரசிகர்கள் பலரும் இவரை நடிப்பின் நாயகன் என்று அன்புடன் அழைப்பார்கள். இத்தகைய பெருமைகளை உடைய சூர்யா இன்றுடன் (செப்டம்பர் 6) திரைத்துறையில் 27 வருடங்களையும் நிறைவு செய்துள்ளார்.திரைத்துறையில் 27 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா…. புதிய போஸ்டர்கள் வெளியீடு!எனவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கங்குவா மற்றும் சூர்யா 44 படத்திலிருந்து புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
3D தொழில்நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம், சூர்யாவின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இவரது நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்பப்படுகிறது.