திருமணம் முடிந்து 10 நாட்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை புகார்: கணவர் கைது..!

0
178

திருமணம் முடிந்து 10 நாட்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை புகார்: கணவர் கைது..!

நடிகை பூனம் பாண்டே அளித்த புகாரில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2011 -ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற போது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து அதன் மூலம் கவனம் பெற்றவர் பூனம் பாண்டே. தொடர்ந்து ஒரு சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களைத் தாண்டி சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருவதால் இவர் மீது ஊடக வெளிச்சம் விழுகிறது.

நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 10-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழேழு ஜென்மம் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கோவா சென்றிருந்த பூனம் பாண்டே, தன் கணவர் சாம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சாம் பாம்பேவை கைது செய்துள்ளனர்.