தியேட்டர்கள் மூடல்… ஓடிடி-யில் ‘பீட்சா 3: தி மம்மி’!

0
6

தியேட்டர்கள் மூடல்… ஓடிடி-யில் ‘பீட்சா 3: தி மம்மி’!

பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பீட்சா’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது சிவி குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்தின் இயக்கத்தில் மூன்றாம் பாகமான ‘பீட்சா 3: தி மம்மி’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு கதாநாயகனாக நடிக்கிறார்.

பவித்ரா மரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இப்படம் வெளியாவதாக இருந்தது.

பீட்சா 3, பீட்சா 2 படத்தின் தொடர்ச்சி இல்லை என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது லாக்டவுன் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எப்போது தியேட்டர்கள் மீண்டும் திறக்கும் என்று தெரியவில்லை. எனவே பீட்சா 3 படத்தை ஓடிடி-யில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாகக் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.