திட்டம் இரண்டு விமர்சனம்

0
13

திட்டம் இரண்டு விமர்சனம்

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கும் படம் திட்டம் இரண்டு.

சென்னைக்கு புதிதாக பொறுப்பேற்க வரும் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ், முதல் வழக்கே காணாமல் போன தன் நெருங்கிய தோழி அனன்யாவை தேடி கண்டுபிடிப்பது தான். தன் தோழியை தேடிச் செல்லும் போது எதிர்படும் விஷயங்கள், சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்க இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தோழியை கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே திடுக்கிடும் மீதிக்கதை.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக நடித்திருக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் இவரது தோழியாக அனன்யா, ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக சுபாஷ் செல்வம், பாவல் நவகீதன், ஜீவா ரவி, கோகுல் ஆனந்த், முரளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் படத்தின் ஒட்டத்திற்கு துணை போகின்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

கோகுல் பினாய் படத்தின் ஒளிப்பதிவு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்படும்.

சதீஷ் ரகுநாதனின் இசை த்ரில்லர் படத்திற்கு உண்டான விறுவிறுப்பை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறார்.

எடிட்டர் பிரேம் குமார்,கலை இயக்குநராக ராகுல் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

திட்டம் இரண்டு திரைக்கதையை சாமர்த்தியமாக வடிவமைத்து அதை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனர்  விக்னேஷ் கார்த்திக் இறுதிக் காட்சியில் ஊகிக்கமுடியாத திருப்புமுனையை கொடுத்து படத்திற்கு வலு சேர்த்து அதிர்ச்சியளித்து உள்ளார்.

மொத்தத்தில் திட்டம் இரண்டு மர்ம முடிச்சுக்கள் நிறைந்த த்ரில்லர்.