திடீரென மதம் மாறியது ஏன்? – ரகசியத்தை உடைந்த வனிதா
நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தளங்களிலும் கலக்கி வரும் வனிதா இன்ஸ்டாவிலும் செம ஆக்டீவாக இருப்பார். அன்றாட நிகழ்வுகள், சினிமா அப்டேட்கள் என அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவிடுவது வழக்கம்.
தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வனிதா, இவர் கைவசம் அனல் காற்று, காத்து, தில் இருந்தா போராடு, கென்னி, பிக் அப் டிராப், அந்தகன், சிவப்பு மனிதர்கள், 2கே காதல் அழகானது என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இதுதவிர அண்மையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் வனிதா. மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் வனிதா.
இந்நிலையில் தான் பின்பற்றும் மதம் குறித்த அறிவிப்பு ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், பௌத்தத்தை மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கைக்காக பல வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுத்தேன்… திரும்பிப் பார்க்காமல்… அதற்கு பின் அதைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய எதுவுமே இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும் புத்திசம், கோவில் பயணம் போன்ற ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/Cbo_5wXLhvn/?utm_source=ig_embed&utm_campaign=loading