தார்மீகரீதியாக கல்கி குடும்பத்தினருக்கு மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் பொருளாதார ரீதியாக கெளரவம் செய்ய வேண்டும் – பட்டுக்கோட்டை பிரபாகர் கோரிக்கை
குட் மார்னிங் சொல்வது போல யாரைப் பார்த்தாலும் இந்தப் படம் இன்னும் பார்க்கலையா என்று கேட்ட அனுபவங்கள் என் நினைவில் மூன்று படங்கள்.
1. பாபி
2. மரோ சரித்திரா
3. உலகம் சுற்றும் வாலிபன்
இப்போது நான்காவதாக..
பொன்னியின் செல்வன்.
இப்படி ஒரு எழுச்சி அலையை உருவாக்கியதற்காகவே மணிரத்னம் டீமுக்கு மிகப் பெரிய பாராட்டு.
விமரிசனத்தை விடவும்.. எந்தச் சூழ்நிலையில் எந்த அரங்கில் எப்படிப் பார்த்தேன் என்று பலரும் சுவாரசியமாக சொல்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் புத்தகத்தை வெளியிட்டாவர்கள் எல்லாம் படு ஹேப்பி. உலகெங்கும் பல நூலகங்களில் இந்தப் புத்தகம் படிக்க அட்வான்ஸ் புக்கிங்கில் மக்கள் வெய்ட்டிங்.
இத்தனைக்கும் ஆதார சக்தி கல்கியின் அழுத்தமான பாத்திரப் படைப்புகளும், ஆழமான எழுத்தும்.
இயக்குனர் கேயார் பேசியதாக இன்றைய தினத்தந்தியில் வந்துள்ள செய்தியில் கல்கியைப் பற்றி அவர் புகழ்ந்துள்ளதையும்.. தார்மீகரீதியாக கல்கி குடும்பத்தினருக்கு மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் பொருளாதார ரீதியாக கெளரவம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும்..நான் வரவேற்று வழிமொழிகிறேன்.
செய்வார்கள் என்று நம்புகிறேன்.