#தாமிரபரணி, #ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு

0
2

#தாமிரபரணி, #ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணையும் பிரபு

விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குனர் A.வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே #தாமிரபரணி, #ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர். இதில் பிரபு சிறிது இளைத்து காணப்படுகிறார்.
விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.
இப்படத்தை நடிகர்கள் ரமணா – நந்தா இணைந்து  #ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள்.
A.வினோத்குமார் டைரக்டராக அறிமுகமாகிறார்.
இசை:யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம்
Pro:ஜான்சன் .