தாணுசார் தலைவரை வச்சி கலக்குறீங்க:  விஜய் புகழாரம்

0

விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல், ரஜினியும் விஜய் மீது தனி பிரியம் வைத்திருப்பார். இவ்விரு ஜாம்பவான்களின் படத்தை ஒரே நேரத்தில் தயாரிக்கும் பாக்கியத்தை பெற்றிருப்பவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

விஜய்யை வைத்து ‘தெறி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை தயாரித்தவர், தற்போது ரஜினியை வைத்து ‘கபாலி’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டீசரே பெரிய சாதனை படைத்து வரும் நிலையில், படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெரும் நம்பிக்கை அவருக்குள் இருக்கிறது.

சமீபத்தில் தாணுவை சந்தித்த விஜய், கபாலி படம் குறித்து தாணுவிடம் கூறும்போது, தலைவரை வைத்து படம் பண்ணி கலக்குறீங்க சார் என்று கூறியுள்ளார். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தாணுவிடம் ‘தெறி’ படம் குறித்து விசாரித்ததாகவும், ‘தெறி’யின் வெற்றி விழாவில் அவர் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை கலைப்புலி தாணு பெருமை பொங்க கூறியுள்ளார்.