தவம் திரை விமர்சனம்

0

தவம் திரை விமர்சனம் ரேட்டிங்

பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அலுவலக நண்பர்களுடன் செல்லமறுக்கிறார். பின்னர் அன்னைவயல் கிராமம் என்கிற பெயரை கேட்ட உடனே நண்பர்களுடன் செல்ல சம்மதிக்கிறார்.அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார். இதனால் பூஜாஸ்ரீயை கொல்ல வில்லன் கும்பல் துரத்துகிறது. இந்நிலையில் வசி யாருடைய மகன் என்பதை பூஜாஸ்ரீக்கு தெரியபடுத்துகிறார்கள்.
முப்போகம் நெல் விளையக் கூடிய அன்னை வயல் கிராமத்தில், மக்களின் நாயகனாக வலம் வருகிறார் சீமான். முதியவர்களுக்கு எழுத்தறிவு, பட்டறிவு, படிப்பறிவு சொல்லிக்கொடுப்பதோடு, விவசாயமும் செய்து வருகிறார். அதே ஊரில் வசிக்கு உறவினர் போஸ் வெங்கட், ஒரு அரசு ஊழியராக பணி செய்கிறார். போஸ் வெங்கட்டுக்கு பணச்சிக்கல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், அதே ஊரைச் சேர்ந்த எம்.எல்.ஏ அவருக்கு ஓரு வழி காட்டுகிறார். நூறு ஏக்கர் நிலம் வாங்க ஜெர்மனி தொழிலதிபர் வந்திருப்பதாகவும். இந்தக் கிராமத்தில்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதாகவும் கூறுகிறார். நூறு ஏக்கர் நிலம் வாங்கித் தந்தால் கோடி ரூபாய் கொடுப்பதாக வாக்கு தருகிறார். ஆனால், சீமான் அனுமதி இல்லாமல் நிலத்தை யாரும் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதை அறிந்து, அவரிடம் ஜெர்மன் தொழிலதிபர் நூறு ஏக்கரில் நம் மக்களுக்கு வேலை கொடுத்து விவசரயம் செய்யப் போகிறார்கள் என்று கூறவே சீமானும் ஒத்துக்கொள்கிறார். ஆனால், போஸ்வெங்கட், எம்.எல்.ஏ ஏமாற்று வேலை சீமானுக்கு தெரிய வர, தனக்கு தெரியாமல் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு செய்த எம்.எல்.ஏவிடமிருந்து அவர் ஊர்மக்களை தடுத்து நிறுத்துகிறார். இந்நிலையில் விவசாயம் சிறப்பாக நடக்கிறது. எம்.எல்.ஏ, கூட்டாளிகள் சேர்ந்து சீமானை பழிவாங்க சீமான் மகன் கண் எதிரிலேயே அவரை கொலை செய்கின்றனர். சாகும் தருவாயில் சீமான், தன் மகனிடம் ஒரு சத்யம் வாங்குகிறார். அந்தச் சத்தியத்தை மகன் நிறைவேற்றினாரா? பூஜாஸ்ரீPக்கும் வசிக்கும் தொடர்பு என்ன? என்பது மீதிக்கதை.

வசீகரமாக இருக்கும் புதுமுகம் நாயகன் வசி மற்றும் கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்க்கும் நாயகி பூஜாஸ்ரீP இருவரும் இயல்பாக நடித்திருக்கின்றனர்.

கதையின் கதாநாயகனே சீமான் தான். விவசாயத்தின் அருமை பற்றி தனது கம்பீரமான நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். நாட்டில் அடுத்து உலகப் போர் வந்தால், அது நீருக்கும், சோறுக்குமாக இருக்கும் என்று சீமான் பேசும் வலிமையான வசனங்கள் இன்றைய சமூகத்துக்கு அவசியமான பாடங்கள்.

வில்லனாக வரும் விஜயானந்த், அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் தங்களது பங்களிப்பை நகைச்சுவையுடன் கொடுத்துள்ளனர்.

ஸ்ரீPகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம்.

கிராமத்தின் இயற்கையை கண்களுக்கு ரம்மியமாக காட்சிபடுத்தியுள்ளார்; ஒளிப்பதிவாளர் வேல்முருகன்.

படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் எடிட்டர் எஸ்.பி.அகமது.

விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைத்து ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கியுள்ளனர். தோய்வு அதிகம் உள்ள முதல் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். க்ளைமேக்ஸ் சண்டை காட்சி டூ மச்.

மொத்தத்தில் ஆஸிப் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள தவம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்.

நம்ம பார்வையில் ‘தவம்” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.