’தளபதியுடன் தல’ : படப்பிடிப்பு தளத்தில் விஜய் – தோனி சந்திப்பு – வைரல் ஆகும் படங்கள்

0
35

‘தளபதியுடன் தல’ : படப்பிடிப்பு தளத்தில் விஜய் – தோனி சந்திப்பு – வைரல் ஆகும் படங்கள்

பீஸ்ட் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு திடீர் விசிட் அடித்த தோனி, நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார்.

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது.

அப்போது பீஸ்ட் படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விசிட் அடித்த தோனி, அங்கு நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.