தல 61 அப்டேட்.. பிரபல இயக்குநருடன் இணையும் அஜித்…
கடைசியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு, எந்த இயக்குநருடன் கூட்டணி வைக்க உள்ளார் என்று ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்துடன் இணைந்து கிரீடம் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய், அஜித்தை சந்தித்து புதிய கதை ஒன்றை கூறியுள்ளாராம். அது அஜித்திற்கு பிடித்துவிட்டதால், அடுத்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குவார் என்று கூறப்படுகிறது.