‘தலைவர் 170’ : 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த ரஜினி – அமிதாப் கூட்டணி

0
174

‘தலைவர் 170’ : 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த ரஜினி – அமிதாப் கூட்டணி

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

மேலும், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. 1991-ம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ திரைப்படத்தில் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.