தர்பார் திரை விமர்சனம்

0

தர்பார் திரை விமர்சனம்

ரேட்டிங்

டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்) மும்பையில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பிரச்சனையை தீர்க்க அங்கு அனுப்பப்படுகிறார். மும்பை வந்தவுடன் துணை முதல்வரின் மகளை யாரோ கடத்தி விட்டார்கள் என அறிந்து உடனே களத்தில் இறங்குகிறார் ஆதித்யா அருணாச்சலம். கடத்தப்பட்ட துணை முதல்வரின் மகளை விடுவித்தபிறகும், அவரை இன்னும் காணவில்லை என்று கூறி சார்ஜ் எடுத்த இரண்டே நாளில் போதைப்பொருள் விற்பவர்கள், பெண்களை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து சிட்டியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றார். அந்த ரெய்டில் பெரிய தொழில் அதிபரின் மகனான போதைப் பொருள் சப்ளை செய்யும் அஜய் மல்ஹோத்ராவை (பிரதீக் பாபர்) பிடிக்கிறார் ஆதித்யா. அவனை வெளியே விடாமல் ரஜினி பிடிவாதம் பிடிக்க, தனது பவரை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் தன் மகனுக்கு பதில் ப்ராக்ஸி (வேறு ஒரு நபரை) சிறையில் மாற்றி தன் மகனை சிறையில் இருந்து தப்பிக்க வைத்து வேறு நாட்டிற்கு அனுப்பிவிடுகிறார். இதை அறிந்த ஆதித்யா அருணாச்சலம் தன் தந்திரத்தால் அந்த தொழிலதிபர் மகனை கொல்கிறார். இறந்தது தன் மகன் இல்லை, அது 27 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரை காமெடி பீஸாக்கிய பயங்கரமான கேங்ஸ்டரான ஹரி சோப்ரா (சுனில் ஷெட்டி) மகன் என கூறும் தொழிலதிபர் பயத்தில் இருக்கிறார். தன் மகனை கொன்ற ஆதித்யா அருணாச்சலத்தை பழிவாங்க நாடு திரும்பும் ஹரி சோப்ரா மற்றும் அவர் மகள் வள்ளியையும் (நிவேதா தாமஸ்) குறி வைத்து தாக்குகிறார்கள். விபத்தில் ஆதித்யா அருணாச்சலம் சுயநினைவுக்கு வரும் போது தன் மகள் இறந்ததை அறிந்து அதற்கு தொழிலதிபர் தான் காரணம் என அவரை கொள்ள செல்லும் போது, அந்த நபர் கொல்லப்பட்ட விஷயம் அறிந்து குழப்பத்தில் இருக்கிறார். பிறகு உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் தான் அஜய் மல்ஹோத்ரா என பின்னர் தெரிய வருகிறது. அதன் பின் ஆதித்யா அருணாச்சலத்தின் வெறித்தனமான தர்பார் தொடர்கிறது. தனது மகளை கொன்ற ஹரி சோப்ராவை கண்டுபடித்து அழித்தாரா? என்பது மீதிக்கதை.

அதிரடி போலீஸ் அதிகாரியாக தனது மிடுக்கான நடிப்பால் அப்பா-மகள் சென்டிமெண்ட், நயன்தாராவுடன் காதல், ஸ்டைல், சுறுசுறுப்பு என இளமைதுள்ளளான எனர்ஜியை வெளிப்படுத்த்p அனைவரையும் அசர வைக்கிறார். குறிப்பாக யோகிபாபு தன்னை கலாய்க்கும் காட்சிகளில் தூள் கிளப்புகிறார்.

லில்லி (நயன்தாரா) அழகாய் வந்து போகிறார் அவ்வளவுதான். இயக்குனர் முருகதாஸ் இவரை சரியாக பயன்படுத்தவில்லை.

நிவேதா தாமஸின் நடிப்பு அருமை.

காமெடி மூலம் யோகிபாபு படத்திற்க்கு பலம் சேர்க்கிறார். ரஜினியை கலாய்க்கும் காட்சிகளில் அப்ளாஸ் பெறுகிறார்.

மிகப்பெரிய சர்வதேச போதைமருந்து டானாக வரும் ஹரி சோப்ரா (சுனில் ஷெட்டி) பலம் இல்லா வில்லன். ரஜினிகாந்தின் ஒன் மேன் ஷோவால் இவர்கள் எடுபட வில்லை.

கண்களுக்கு விருந்தளிக்கும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மற்றும் அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கிறது.

முருகதாஸ் தர்பாரில் ரஜினிக்காகவே மட்டும் கதையமைத்து, திரைக்கதையில் சசிகலாவை வம்புக்கு இழுத்திருக்கிறார். தர்பாரில் மற்றவர்களுக்கும் பங்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் ரஜினி மேல் மட்டும் அதிகபடியான கவனம் செலுத்தியுள்ளார் என சொல்லலாம்.

மொத்தத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ஆக்ஷன், டிராமா கலந்த கமர்ஷியல் படம் ‘தர்பார்’

நம்ம பார்வையில் ‘தர்பார்’ படத்துக்கு 3.5 ஸ்டார் தரலாம்.