தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்

0
54

தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மதிமாறன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ், வர்ஷா பொல்லமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் செல்ஃபி. இப்படத்தில் தயாரிப்பாளரான D G குணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் சஹானா என்பவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.மேலும், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, , சக்திவேல் (sakthi flim factory) , டில்லிபாபு (Axess flim factory) , நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், ரத்தனவேலு (Randy) நடிகர்கள் சந்தானம், ரிச்சர்டு, விஜய் பிரபாகர் , தங்கதுரை,சவுந்தரராஜா இயக்குனர்கள் தங்கர் பச்சான், சீனு ராமசாமி, பொன்ராம், சாம் ஆண்டன், ரத்தின சிவா, அருண்ராஜா காமராஜ், மோகன் ஜி, Knack Studio கல்யாணம் , செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் ,உள்ளிட்ட திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவ்விழாவிற்கு வருகை தந்த  அனைவரையும் தயாரிப்பாளர் D சபரிஷ் வரவேற்றார்.