தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

0
126

தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள் மோகன் எஸ்.ஜே.சூர்யா முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘டான்‘ படத்தில்  சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), KM.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டூனி ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J – AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions சார்பில், Sivakarthikeyan Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சூரி இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

டான் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் 10 நாட்களுக்கு முன்பாகவே படத்தை பார்த்து விட்டேன் . சிவகார்த்திகேயன் கல்லூரி போர்ஷன் மட்டுமில்லாமல் பள்ளி போர்ஷனில் சின்ன பையனா சூப்பராக நடித்து உள்ளார். ஒரு நல்ல படத்தை பார்த்த ஃபீலிங் கொடுத்தது.

கண்டிப்பாக டாக்டர் படத்தை விட டான் சிறப்பாக இருக்கும். இப்போதைக்கு தமிழ் நாட்டின் டான் இரண்டு பேர். முதல் நபர் சிவகார்த்திகேயன், இரண்டாவது அனிருத். இவர்கள் எழுதி, இசையமைத்த பாடல்கள் எல்லாமே செம மாஸக இருக்கிறது.

டான் திரைப்படத்தின் ட்ரெய்லரில் அரசியல்வாதி என்றாலே பொய் என பேசும் வசனம் இடம் பெற்று இருக்கிறது என்றார் .

ஏற்கனவே படத்தில் இருந்து அனிருத் இசையில் இருந்து வெளியாகி இருக்கும், ‘ஜலபுல ஜங்கு’ மற்றும் ‘பே’, ‘பிரைவட் பார்ட்டி’ ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘டான்‘ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், சிறப்பாக இ்ருப்பதாக கருத்து தெரிவித்து இருக்கின்றனர் .