தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக STR நடிக்கும் புதிய படம்

0
18

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக STR நடிக்கும் புதிய படம்

தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிக்க ஞானகிரி இயக்குகிறார்

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் சிலம்பரசன் TR அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்க வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்த படத்தை தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், ‘வானம்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.