தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க பதவியேற்பு விழா: தலைவர் ஆர்.கே.செல்வமணி உட்பட சங்க நிர்வாகிகளுக்கு “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் சால்வை அணிவித்து மரியாதை

0
88

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க பதவியேற்பு விழா: தலைவர் ஆர்.கே.செல்வமணி உட்பட சங்க நிர்வாகிகளுக்கு “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் சால்வை அணிவித்து மரியாதை

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி நேற்று சென்னை வடபழனி, கமலா திரையரங்கில் பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் அலுவலர் செந்தில்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்களில் 2022-24 ஆம் ஆண்டிற்கான திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக
ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளராக ஆர்.வி.உதய குமார், பொருளாளராக பேரரசு, இணைச் செயலர்களாக ஏகம்ப வாணன் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி. மேலும், செயற்குழு உறுப்பினர்களாக சரண், ஏ. வெங்கடேஷ், எழில், ரவி மரியா, திருமலை, ரமேஷ் கண்ணாவுடன் மொத்தம் 12 பேர் பதவியேற்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து 2வது முறையாக இயக்குனர்கள் சங்கத் தலைவராக பதவியேற்ற ஆர்.கே.செல்வமணியை, 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் அதன் தலைவர்- D.R.பாலேஷ்வர், செயலாளர் – R.S.கார்த்திகேயன் , பொருளாளர் – மரிய சேவியர் ஜாஸ்பெல் மற்றும் துணைத்தலைவர் – ‘கலைமாமணி’ மணவை பொன் மாணிக்கம், இணைச்செயலாளர் – மதிஒளிக்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.