தமிழில் கால்பதிக்கும் நடிகர் பிரதீப் ஜோஷ்
கராத்தே வீரரான இவர் மலையாளப் படங்களில் வில்லன்,குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். தமிழில் நடிக்க தீராத ஆசை இவருக்கு. கடந்த சில ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க படம் கிஷோர் _ கருணாகரன் நடித்த “கடிகார மனிதர்கள்.
“வைகறை பாலன் இயக்கிய படம் இது. இப்படத்தில் மனதில் நிற்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதில் இவர் இணைத்தயாரிப்பாளரும் கூட. மறுபடியும் இணைத்தயாரிப்பாளராகி இயக்குனர் சங்கர் உதவியாளர் இயக்கும் தமிழ் ,மலையாளத்தில் ஜிஜினி ரோஸ் எனும் படத்தில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் நிலைத்து நின்று குறிப்பிடும்படியான நடிகராக வரவேண்டும் என்கிறார் பிரதீப் ஜோஷ்.