தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெப்சி தலைவர் வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி இராமநாராயணன்,
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர்கள் சங்க பொருளாளர் பேரரசு, பெப்சி பொருளாளர் சுவாமிநாதன், பெப்சி துணை தலைவர் ஸ்ரீதர், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவரும் கவுன்சில் செயற்குழு உறுப்பினருமான விஜயமுரளி ஆகியோர் அருகில் உள்ளனர்.