முதல் பிரதியை பார்த்ததும் “அலங்கு” படத்தை முழுவதுமாக கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்
DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் ஆக்ஷன் திரைப்படம் “அலங்கு” கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்து உலகம் முழுவதும் வெளியிடும் உரிமைகளை வாங்கி இருக்கிறது Sakthi Film Factory.
தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து , மாறுபட்ட கதைக்களம் கொண்ட பல திரைப்படங்கள் அவ்வபோது வெற்றிபெறுவது வழக்கம் , இவ்வருடமும் அதைபோல பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் “அலங்கு “ திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் SP. சக்திவேல்.
மேலும், இத்திரைப்படம் முற்றிலும் ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி உள்ளது.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறது.
இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார். இவர் “உறுமீன்”, “பயணிகள் கவனிக்கவும்” என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம்.
படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படி படம் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த “செல்ஃபி” திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது.
CAST & CREW
நடிகர்கள்:
எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல்
ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார்
இசை : அஜீஷ்
கலை இயக்குனர் : P.A. ஆனந்த்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
சண்டை பயிற்சி : தினேஷ் காசி
விலங்கு பயிற்சி : செந்து மோகன்
ஆடை : T.பாண்டியன்
ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா மாக்ஸ்வெல் J
பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கலரிஸ்ட் : ரங்கா
கிராபிக்ஸ்&வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ , Dnote
தயாரிப்பு நிர்வாகி : S.முருகன்
மக்கள் தொடர்பு : R.குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : தண்டோரா & தினேஷ் அசோக்
நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி
தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா
தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS