தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரபலம் – அதிர்ச்சியில் படக்குழு
நடிகர் தனுஷ் வரிசையாக அவர் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
அதன் பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தொடங்கிய ’வாத்தி’ படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ‘வாத்தி’ படத்தில் இருந்து விலகியுள்ளார். இத்தகவலை ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தபதிவில், “தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தில் பணிபுரிய முடியாமல் போனது துரதிர்ஷ்டம். விரைவில் வேறொரு படத்தில் பணிபுரிய காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
It is unfortunate that I couldn’t be a part of @dhanushkraja’s #vaathi #SIRmovie Hoping to work soon with @Fortune4Cinemas @SitharaEnts @vamsi84 #venkyatluri 😊. #covid pic.twitter.com/fjRq9GYsiJ
— Dinesh krishnan DP (@dineshkrishnanb) January 25, 2022