தனுஷ் இயக்கத்தில் ரஜினி?

0
10

தனுஷ் இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் படப்பிடிப்பிற்காக கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் தங்கி இருந்த ரஜினிகாந்த், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலேயே ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி  செலுத்திக்கொண்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

விரைவில் டப்பிங் பணிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், அது முடிந்ததும், அடுத்த மாதம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று வந்த பின் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

ஏற்கனவே ப.பாண்டி படத்துக்குப் பிறகு ரஜினியை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்பது தனுஷின் ஆசை.

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று வந்த பின், மீண்டுமொருமுறை இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கும் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க, வி கிரியேஷன்ஸ் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.

‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் இருவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாயை, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.