தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

0
151

தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

நடிகர் தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு தனது பெயரை மாற்றியுள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர்.

முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

சமீபத்தில் ஐஸ்வர்யா – தனுஷ் இணைவதாக தகவல்கள் பரவின இன்ஸ்டாவில் கூட இன்னும் ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றவில்லை அதாவது, ஐஸ்வர்யா ஆர். தனுஷ் என்று வைத்துள்ளார். இந்த நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சில நாட்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றியுள்ளார்.

ஐஸ்வர்யா ஒரு பாடல் வீடியோ தனது குழுவுடன் இணைந்து உருவாக்குவது நமக்கு தெரியும். அந்த பாடல் வீடியோவின் சின்ன புரொமோ வெளியாக அதில் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என பதிவு செய்துள்ளார்.