தனுசு ராசி நேயர்களே திரை விமர்சனம்

0

தனுசு ராசி நேயர்களே திரை விமர்சனம்

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தை இயக்கியிருக்கிறார் சஞ்சய் பாரதி.

இதில் ஹரிஷ் கல்யாண், டிகாங்கனா சூர்யவன்ஷி, ரெபா போனிகா ஜான், முனிஷ்காந்த், யோகிபாபு, பாண்டியராஜன், சார்லி, ரேணுகா, மயில்சாமி, சங்கிலி முருகன், டேனியல் ஆன்னி போப், டி.ஸ்கே, கும்கி அஷ்வின், ஹரிதா, சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-பி.கே.வர்மா, இசை-ஜிப்ரான், படத்தொகுப்பு-குபேந்திரன், கலை-உமேஷ் ஜெ.குமார், பாடல் விவேகா, மதன்கார்கி, விக்னேஷ்சிவன், கு,கார்த்திக், சந்துரு, வசனம்-எம்.ஆர்.பொன் பார்த்திபன், ஆடியோ-டி.உதயகுமார், நடனம்-கல்யாண், எம்.ஷெரிஃப், ஆடை-ஜி.அனுஷா மீனாக்ஷி, பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

ஜாதகம் பார்க்காததால் தன் தந்தையை இழந்த  ஹரிஷ் கல்யாண் தன் தாத்தாவின் சொல்படி ஜாதகப்பிரியராக மாறிவிடுகிறார். நல்ல வேலையில் இருந்தாலும் கன்னி ராசி பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்று வைராக்கியத்துடன் பெண் தேடுகிறார். இதனால் காதல் பல முறிந்தாலும் கவலைப்படாமல் இருக்கிறார். முன்னால் காதலியின் திருமணத்திற்கு செல்லும் ஹரிஷ் அங்கே டிகாங்கனாவை பார்க்கிறார் பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ஆனால் டிகாங்கனா செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் விஞ்ஞானி. தன் வாழ்நாள் ஆசைக்காக திருமணம் என்பதில் பிடிப்பில்லாமல் இருக்கும் டிகாங்கனாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் ஹரிஷ். இவர்கள் காதல் கை கூடியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சாக்லெட் பாயாக ஹரிஷ் கல்யாண், அழகால் ஆட்டம் போடும் டிகாங்கனா சூர்யவன்ஷி, முன்னால் காதலி ரெபா போனிகா ஜான்,மாமாவாக முனிஷ்காந்த்,   யோகிபாபு, பாண்டியராஜன், சார்லி, ரேணுகா, மயில்சாமி, சங்கிலி முருகன், டேனியல் ஆன்னி போப், டி.ஸ்கே, கும்கி அஷ்வின், ஹரிதா, சம்யுக்தா ஆகியோர் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
துள்ளல் இசை-சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு-ஏ.ஆர்.சூர்யா இருவரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

இயக்கம்-சஞ்சய் பாரதி. ஜாதகம் பார்ப்பது நல்லதா? கெட்டதா? என்பதை காதல் கதையோடு விஞ்ஞானத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சஞ்சய் பாரதி. இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் தனுசு ராசி நேயர்களே இளமை துள்ளும் ஹைக்கூ காதல்.

மொத்தத்தில் இளம் காதலர்களுக்கான படம் தனுசு ராசி நேயர்களே.