தனுசு ரஜினியுடன் நடிக்கும் நாகார்ஜுனா நெகிழ்ச்சி!
ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 171-வது படமாக தயாராகும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், சுருதிஹாசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் விவரங்களை படக்குழுவினர் வெளியிட்டு
வருகிறார்கள். மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்து பிரபலமான சவுபின் சாஹிர் இதில் நடிக்கி றார். இந்த நிலையில் ரஜினியுடன் நடிகர் நாகார்ஜுனாவும் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இது படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியுடன் நடிப்பது குறித்து நாகார்ஜுனா சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “கைதி படத்தில் இருந்தே லோகேஷ் கனகராஜ் படத்தில் பணியாற்ற ஆவலோடு இருந்தேன். இப்போது புதிய படத்தில் இணைந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் தலைவர் ரஜினியுடன் நடிக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா ஏற்கனவே தமிழில் ரட்சகன், பயணம், தோழா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் குபேரா படத்தில் தனுசுடன் நடிக்கிறார்.