தனக்கென தனி அடையாளம் பதிக்கும் அஞ்சனா கீர்த்தி!

0
386

தனக்கென தனி அடையாளம் பதிக்கும் அஞ்சனா கீர்த்தி!

அழகிய பாண்டியபுரம், அந்தாதி, ஜம்புலிங்கம் 3D, அம்புலி, ஆகா, சென்னை-28 பார்ட் 2 போன்ற படங்களில் நடித்தவர் அஞ்சனா கீர்த்தி. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை 28 பார்ட் படத்தில் நடிகர் விஜய் வசந்தின் மனைவியாகவும், அதைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவான “ஆர்.கே.நகர்” திரைப்படத்தில் காமாட்சி என்ற கேரக்டரில் நடித்தார்.

இப்போது சிம்புவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் “மாநாடு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அஞ்சனா கீர்த்தி. இளைஞர்கள் அதிகம் விரும்பக் கூடிய படங்களைத் தேர்ந்தெடுத்து அதில் எது தனித்துவமான கதாபாத்திரமோ அதை ஏற்றுக் கொண்டு தனது சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் அஞ்சனா கீர்த்தி இன்னும் பல படங்களின் மூலமாக நம்மைக் கவர இருக்கிறார்.