ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் தயாரிப்பில் அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ஹாஸ்டல்”

0
3

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் தயாரிப்பில் அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும்  “ஹாஸ்டல்”

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் மூம்முரமாக படக்குழு இறங்கியுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்)
இணை தயாரிப்பு – கல் ராமன்
இயக்கம் – சுமந்த் ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – பிரவீன் குமார்
இசை – போபோ சசி
படத்தொகுப்பு – ராகுல்
கலை – துரைராஜ்
நிர்வாக தயாரிப்பு – R.முரளி கிருஷ்ணன்
புரோடக்‌ஷன் மேனேஜர் – T.செல்வராஜ், S.N. அஷ்ரப்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)