டொராண்டோ தமிழ் ஃபிலிம்ஸ் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த படமாக தேர்வான ‘கன்னி மாடம்’ – மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் ஹசீர்

0
124

டொராண்டோ தமிழ் ஃபிலிம்ஸ் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த படமாக தேர்வான ‘கன்னி மாடம்’ – மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் ஹசீர்

ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில், போஸ் வெங்கெட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் இணைந்து நடித்து பிப்ரவரி 21-ம் வெளியாகி மக்களின் கவனம் பெற்று நல்ல வெற்றியை பெற்ற படம் ‘கன்னி மாடம்’.

சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற டொரான்டோ தமிழ் பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் ‘கன்னி மாடம்’ பங்கேற்றது. அங்கு இப்படம் “சிறந்த திரைப்படம் – ரசிகர்கள் தேர்வு” விருது பெற்றது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஹசீர் கூறியதாவது:

தரமான படங்களை தயாரிக்கும் நோக்கத்தில் எனது நிறுவனமான ரூபி பிலிம்ஸ் மூலம் வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி ஆகிய படங்களை தயாரித்தேன். அதில் என் இரண்டாவது படமான கன்னிமாடம் ‘டொரோண்டோ தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில்’ சிறந்த படம் (பார்வையாளர் விருப்பம்) தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், இன்னும் இது போன்ற நல்ல படங்களை தயாரிக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த என் படக்குழுவினருக்கும், ஊடக நண்பர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் மற்றும் டொரோண்டோ தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் தேர்வு குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.