டிரிப் சினிமா விமர்சனம்

0
41

டிரிப் சினிமா விமர்சனம்

ட்ரிப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கி இருக்கிறார். ளுயi குடைஅ ளுவரனழைள சார்பில் யு.விஸ்வநாதன் மற்றும் நு.பிரவீன்குமார் இப்படத்தை தயாரித்துள்ளனர். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், ஏது சித்து, ஏது ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை:
அந்தமானுக்கு அருகே இருக்கும் தீவுகளில் மனித மாமிசத்தைத் தின்னும் ஆதிவாசிகள் கூட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது. ஒரு ஜோடி காரில் காட்டுப்பகுதிக்குள் செல்லும் போது மர்ம மனிதர்கள் வழிமறித்து கொலை செய்கிறார்கள். அதே காட்டுப்பகுதிக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா, விஜே சித்து உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கின்றனர். அங்கு காட்டில் இரத்தக்கரையில் இருக்கும் கருணாகரன், யோகிபாபு இருவரையும் பார்த்து கொலைகாரர்கள் என்று பயந்து ஓடுகின்றனர். அன்று இரவு யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி சென்றுவிடுகிறார்கள். சுனைனாவை தேடி வரும் நண்பர்கள் கூட்டத்தில் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இறுதியில் சுனைனாவை மற்ற நண்பர்கள் காப்பாற்ற முடிந்ததா? நண்பர்களை கொலை செய்தது யார்? என்பதே ட்ரிப் படத்தின் மீதிக்கதை.

லிடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனைனா, சுறுசுறுப்பான பெண்ணாக நடித்து மறைமுக கவர்ச்சியால் இளைஞர்களைப் பரவசப்படுத்த முயன்றிருக்கிறார்.

புதுமுகம் பிரவீன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

லட்சுமி பிரியா, நான்சி ஜெனிபர், கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ் ஆகியோர் நண்பர்கள் கூட்டத்துக்குப் பொருத்தம். அனைவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளனர்.

படத்தின் முக்கிய பாத்திரங்கள் யோகிபாபு, கருணாகரன். இருவர்களது டைமிங் காமெடி ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது.

மொட்டை ராஜேந்திரன் வந்து போகிறார்.

ஒளிப்பதிவாளர் உதயசங்கரின் உழைப்பும், பின்னணி இசையில் கலக்கியுள்ள சித்து குமார் உழைப்பும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

சுற்றுலா செல்லும் நண்பர்கள் காட்டுக்குள் சிக்கும் பல படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து ஹியூமரை இணைத்து முற்றிலும் வேறு மாதிரியான படத்தை கொடுத்து உருவாக்கியுள்ளார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாக்க நினைத்த தாங்கள், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் இயக்குனரே!

மொத்தத்தில் ட்ரிப் வெற்றி பயணம்.