டிசம்பர் 17-ல் வெளியாகும் ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தயாரித்திருக்கும் தண்ணிவண்டி

டிசம்பர் 17-ல் வெளியாகும் ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தயாரித்திருக்கும் தண்ணிவண்டி

கலையாத நினைவுகள், சத்யராஜ் நடித்த அடாவடி போன்ற படங்களை தயாரித்த ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா தற்போது தயாரித்திருக்கும் படம் “தண்ணிவண்டி”.

இந்த படத்தில் உமாபதி ராமைய்யா ( தம்பி ராமைய்யா மகன் ) கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக வில் அம்பு படத்தின் நாயாகி சம்ஷகிருதி நடித்துள்ளார். மற்றும் தம்பிராமைய்யா, பாலசரவணன், விதுலேக்கா, தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுரை முத்து, முல்லை கோதண்டம், ஆடுகளம் நரேன், சேரன்ராஜ், மனோஜ்குமார், பாவாலட்சுமணன், காதல்சுகுமார், பிச்சைக்காரன் மூர்த்தி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வினுதா லால் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – எஸ்.என். வெங்கட்
இசை – மோசஸ்
பாடல்கள் – மோகன் ராஜன், கவிஞர் சாரதி, கதிர்மொழி, Ve.மதன்குமார்
எடிட்டிங் – A.L .ரமேஷ்
கலை – கே.வீரசமர்
ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர்
நடனம் – தினேஷ், தீனா
தயாரிப்பு மேற்பார்வை – பழனிச்சாமி
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி – மணவை புவன்
தயாரிப்பு – ஶ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் G.சரவணா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக்க வித்யா
படம் பற்றி இயக்குனர் மாணிக்க வித்யா பகிர்ந்துகொண்டவை..

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள், அப்படி பண போதைக்கு, குடி போதைக்கு, செக்ஸ் போதைக்கு என பல விதமான போதைக்கு அடிமையான 8 கதாபாத்திரங்களின் வாழ்க்கை தான் இந்த படத்தின் திரைக்கதை.

“மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன்., ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங் கெட்டவன் ” என்ற ” சிக்மண்ட் ப்ராய்ட் ” ன் வாசகம் தான் தண்ணிவண்டி படம்.

மதுரை சிட்டியில் தண்ணிவண்டி வைத்து பிழைப்பு நடத்தும் உமாபதி ராமைய்யா, பாலசரவணன், நாயாகி சம்ஸ்கிருதி மூவரும் ஒரு முக்கிய புள்ளியின் கொலை வழக்கில் மாட்டிக் கொள்கிறார்கள் முக்கிய புள்ளியின் ஆட்கள் ஒருபுறம் தேட, காவல்துறை ஒருபுறம் தேட, இறுதியில் தப்பித்தார்களா தங்களை குற்றமற்றவர்கள் என எப்படி நிரூபித்தார்கள் என்பதை காமெடியாகவும் ஜனரஞ்சமாகவும் க்ரைமாகவும் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய முக்கியமான படமாக இது இருக்கும். படம் இம்மாதம் ( டிசம்பர் ) 17 ம் தேதி தமிழகமெங்கும் 100 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.